புதிய ஐந்தாம் தலைமுறை ஏவுகணையை அறிமுகம் செய்த இஸ்ரேல் !!

  • Tamil Defense
  • February 16, 2022
  • Comments Off on புதிய ஐந்தாம் தலைமுறை ஏவுகணையை அறிமுகம் செய்த இஸ்ரேல் !!

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இஸ்ரேலே சேர்ந்த இஸ்ரேலிய ஆயுத தொழிற்சாலை நிறுவனம் தனது புதிய ஐந்தாம் தலைமுறை ஏவுகணையை அறிமுகம் செய்துள்ளது.

BLUE SPEAR என பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுணையானது தரையில் இருந்து புறப்பட்டு தரை இலக்குகளை தாக்கி அழிக்க வல்லது என தகவல்கள் தெரிவிக்கின்றன, சிங்கப்பூரை சேர்ந்த ST ENGINEERING நிறுனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஏவுகணை கூட்டு தயாரிப்பு நிறுவனமான PROTEAS ADVANCED SYSTEMS ஆல் சந்தைப்படுத்தப்படுகிறது, அறிமுகம் ஆவதற்கு முன்னரே எஸ்டோனியா இந்த ஏவுகணையை வாங்க முடிவு செய்துள்ளது கூடுதல் சிறப்பாகும்.

இந்த ஏவுகணையை கப்பலில் இருந்தும் தரையிலிருந்தும் தாக்குதல் நடத்த பயன்படுத்தி கொள்ள முடியும் மேலும் சப்சானிக் வேகத்தில் பாயும் திறன் கொண்ட இதனுடைய தாக்குதல் வரம்பு 290 கிலோமீட்டர் ஆகும்.