இந்திய பேராசிரியர் கண்டுபிடித்த புதிய லேசர் கருவி !!

  • Tamil Defense
  • February 23, 2022
  • Comments Off on இந்திய பேராசிரியர் கண்டுபிடித்த புதிய லேசர் கருவி !!

மும்பை ஐஐடியில் பணியாற்றி வரும் பேராசிரியர் ஒருவர் புதிய அதிநவீன லேசர் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார் இதனை கொண்டு பல்வேறு வகையான கருவிகளை சரி செய்ய முடியும் என கூறப்படுகிறது.

இந்த புதிய கண்டுபிடிப்பு மூலமாக புணரமைப்பு மற்றும் சரிபார்ப்பு தொழில்துறை புதிய உச்சங்களை தொடும் என இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லேசர் கட்டிங், வெல்டிங், தெர்மல் ஸ்ப்ரேயிங் போன்ற பல்வேறு வகையான பணிகளுக்கு திறன் வாய்ந்த பணியாளர்கள் அவசியம் ஆனாலும் அவ்வப்போது தவறுகள் நிகழும் வாய்ப்புகள் அதிகம்.

ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தில் மனித உதவி தேவையில்லை பெரும்பாலும் ரோபோடிக்ஸ் தான் பெரும்பங்கு வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ராணுவத்திற்கான தயாரிப்பு மற்றும் தொழில்துறையிலும் எதிர்காலத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கும் என்றால் மிகையல்ல.