
இந்திய கடற்படைக்காக ஒரு தனி நபர் போக்குவரத்து வானூர்தி ரக ஆளில்லா விமானம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று இந்திய கடற்படையின் துணை தளபதியான வைஸ் அட்மிரல் கோர்மாடே அவர்கள் இந்த பணிகளை பார்வையிட்டார்.
இந்த தனி நபர் போக்குவரத்து வானூர்தி ரக ஆளில்லா விமானத்திற்கு வருணா என பெயரிடப்பட்டுள்ளது, இதனை கப்பல்களில் பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.