மேற்கு நாடுகளிடம் இல்லாத சீனாவின் புதிய நீர்மூழ்கி கப்பல் !!

  • Tamil Defense
  • February 16, 2022
  • Comments Off on மேற்கு நாடுகளிடம் இல்லாத சீனாவின் புதிய நீர்மூழ்கி கப்பல் !!

கடந்த ஃபெப்ரவரி 8ஆம் தேதி சீனாவில் இருந்து சமுக வலைதளங்களில் வெளியான காணொளி ஒன்றில் முற்றிலும் புதிய நீர்மூழ்கி கப்பல் ஒன்றை பாரக்க முடிந்தது.

தற்போது இந்த புதிய நீர்மூழ்கி கப்பல் உலகளாவிய ரீதியில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது, காரணம் தனது ஆதிக்கத்தை அதிகரிக்க விரும்பும் சீனாவின் எண்ணத்தை இது பிரதிபலிக்கவில்லை என்பதாகும்.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் முழுக்க முழுக்க அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிகளை பயன்படுத்தி வரும் நிலையில் உலகில் அமெரிக்காவின் இடத்தை கைபற்ற நினைக்கும் சீனா தொடர்ந்து அளவில் சிறிய டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கிகளை இயக்கி வருவது தெரிந்தது தான்.

ஆனால் இந்த புதிய நீர்மூழ்கி கப்பலானது மேலும் அளவில் சிறியதாகவும் வழக்கமான சீன நீர்மூழ்கி கப்பல்களின் வடிவமைப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகவும் உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வகை நீர்மூழ்கிகள் நிச்சயமாக குறைந்த தூரம் மட்டுமே பயணிக்க முடியும் ஆகவே இதனை தென் சீன கடல் பகுதியிலும் குறிப்பாக ஆழம் குறைந்த பகுதிகளிலும் பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.