அஜித் தோவல் வீட்டில் அத்துமீறி நழைந்த நபர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !!

  • Tamil Defense
  • February 18, 2022
  • Comments Off on அஜித் தோவல் வீட்டில் அத்துமீறி நழைந்த நபர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !!

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் வீட்டில் அத்துமீறி நுழைய முயன்ற நபரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தில்லி காவல்துறையினர் கைது செய்தனர்.

43 வயதான அந்த நபர் தன் உடலில் ஒரு சிப் இருப்பதாகவும் தன்னை யாரோ இயக்குவதாகவும் அதனால் தான் அத்துமீறி நுழைய முயன்றதாகவும் கூறியதை அடுத்து ஸ்கேன் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது அவரது உடலில் அப்படி எந்தவித சிப்பும் காணப்படாத நிலையில் தீவிரமாக விசாரித்த போது இவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட நபர் என்பதும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.

நொய்டாவில் ஒரு சிகப்பு கலர் காரை வாடகைக்கு எடுத்து அவர் அந்த காரில் பயணித்து தில்லி வந்துள்ளார்.அங்கு காரை ஒட்டி கொண்டே திரிந்த அவர் ஒருகட்டத்தில் அஜித் தோவல் வீட்டில் காரை ஓட்டி நுழைய முயன்ற போது பிடிபட்டுள்ளார்.