கோவை தொழில் முனைவோருக்கு 140 கோடி மதிப்பிலான பாதுகாப்பு துறை ஒப்பந்தம் !!

  • Tamil Defense
  • February 7, 2022
  • Comments Off on கோவை தொழில் முனைவோருக்கு 140 கோடி மதிப்பிலான பாதுகாப்பு துறை ஒப்பந்தம் !!

கோடிசியா எனப்படும் கோவை மாவட்ட சிறு தொழிற்சாலைகள் கூட்டமைப்பின் ஒரு பிரிவான கோடிசியா CDIIC அமைப்பிற்கு இந்திய பாதுகாப்பு துறையின் ஒப்பந்தம் கிடைத்துள்ளது.

அதாவது சுமார் 143 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின் மூலமாக 124 வெவ்வேறு பொருட்களை இறக்குமதி செய்யாமல் இந்தியாவிலேயே தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகம் விரும்புகிறது.

ஆகவே நாட்டில் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளை இதில் ஈடுபடுத்த மத்திய அரசு விரும்பி நடவடிக்கை எடுத்து வருகிறது இதையொட்டி மேற்குறிப்பிட்ட ஒப்பந்தம் கோடிசியாவின் CDIICகு கிடைத்துள்ளது.

இதுபற்றி CDIIC இயக்குனர் சுந்தரம் கூறும்போது இந்த 124 தயாரிப்புகள் பற்றிய தகவல்களை மாநிலம் முழுவதும் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பகிர உள்ளோம் இதில் ஆர்வம் காட்டுவோர் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

பின்னர் அந்தந்த நிறுவனங்களின் திறன்களை மதிப்பிட்டு அதற்கேற்ப தயாரிப்பு பணிகளை அவர்களுக்கு வழங்குவோம் முதல்கட்டமாக 10 பொருட்களை தயாரிக்கும் பணியை துவங்க உள்ளோம் என்றார்.