1 min read
இலகுரக டாங்கி தயாரிக்க தென்கொரிய நிறுவனத்துடன் இணைந்து செயல்பட தயார் L & T அறிவிப்பு !!
இந்திய தரைப்படையின் நீண்ட நாள் தேவையான இலகுரக டாங்கியை பெற பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டும் தொடர் தோல்வியை தழுவி வருவது வாடிக்கையாகும்.
இந்த நிலையில் இந்தியாவின் லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் தென் கொரியாவின் ஹான்வஹா நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு இலகு ரக டாங்கியை தயாரிக்க முன்வந்துள்ளது.
ஹான்வஹா நிறுவனத்தின் கே-9 ரக தானியங்கி பிரங்கி வாகனத்தை தான் இந்தியாவிலேயே கே-9 வஜ்ரா என்ற பெயரில் தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தயாரிப்பு முழுக்க முழுக்க இந்தியாவிலேயே நடைபெறும் என்பதும் ஆனால் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் நடவடிக்கைகள் தான் எதிர்காலத்தில் இதனை தீர்மானிக்கும் எனவும் லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.