சீனா பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்கு வழிவகுத்த முக்கிய அதிகாரி ஒய்வு பெற்றார் !!
1 min read

சீனா பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்கு வழிவகுத்த முக்கிய அதிகாரி ஒய்வு பெற்றார் !!

லெஃப்டினன்ட் ஜெனரல் யோகேந்திர குமார் ஜோஷி வடக்கு பிராந்திய தரைப்படையின் தளபதியாக பணியாற்றி வந்தார் அவர் நேற்று முன்தினம் ஒய்வு பெற்றார்.

இவர் இந்திய தரைப்படையின் ஜம்மு காஷ்மீர் ரைஃபிள்ஸ் ரெஜிமென்ட்டின் 13ஆவது பட்டாலியனில் அதிகாரியாக தனது 20 வயதில் இணைந்து தேச சேவையை துவங்கினார்.

பின்னாளில் 13ஆவது ஜம்மு காஷ்மீர் ரைஃபிள்ஸ் பட்டாலியன் கார்கில் போரில் பங்கேற்ற போது அப்படையணியின் கமாண்டிங் அதிகாரியாக பணியாற்றினார் இவரின் கீழ் தான் கேப்டன் விக்ரம் பத்ரா பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போரில் இவரது திறமையான தலைமையின் கீழ் 13ஆவது ஜம்மு காஷ்மீர் ரைஃபிள்ஸ் படையணி பாயின்ட்5140, பாயிண்ட்4875 மற்றும் ராக்கி நாப் ஆகிய மலை சிகரங்களை கைபற்றி வெற்றிக்கு வழிவகுத்தார்.

போரின் போது களத்தில் நின்று உயிரை துச்சமாக மதித்து படையினரை வழிநடத்தி வெற்றியை ஈட்டியமைக்கு போர் காலத்தில் வழங்கப்படும் உயரிய வீரதீர விருதுகளில் ஒன்றான வீர் சக்ரா வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.

பின்னர் கல்வானில் சீன ராணுவத்துடனான மோதல் நடைபெற்ற போது இவர் தான் வடக்கு பிராந்திய தளபதியாக இருந்த போது கல்வானில் வெற்றியை இந்திய படைகள் ஈட்டின இப்படி சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியில் பங்கு வகித்த ஒரே ராணுவ கமாண்டர் எனும் பெயர் பெற்றுள்ளார் என்பது சிறப்புமிக்க தகவல் ஆகும்.