லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் கைகழுவிய ஒப்பந்தம் காரணம் என்ன ??

  • Tamil Defense
  • February 15, 2022
  • Comments Off on லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் கைகழுவிய ஒப்பந்தம் காரணம் என்ன ??

அமெரிக்காவை சேர்ந்த உலகின் முன்னணி ஆயுத நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் ஒரு மிக முக்கியமான ஒப்பந்தம் ஒன்றை கைகழுவியுள்ளது.

அதாவது ராக்கெட்டுகளுக்கான என்ஜினை தயாரிக்கும் “ஏரோஜெட் ராக்கெட்டைன்” எனும் நிறுவனத்தை கையகப்படுத்தும் தனது முடிவை லாக்ஹீட் மார்ட்டின் மாற்றி கொண்டுள்ளது.

அமெரிக்க மத்திய வர்த்தக ஆணையத்தின் நடவடிக்கைகளால் இந்த திட்டத்தை கைவிடுவதாகவும் இந்த ஒப்பந்தம் நிறைவேறி இருந்தால் ஒட்டுமொத்த துறையும் பலனடைந்து இருக்கும் எனவும் லாக்ஹீட் மார்ட்டின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த கையகப்படுத்தும் முயற்சி தோல்வி அடைந்ததால் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் ஹைப்பர்சானிக் ஆயுத தயாரிப்பு எண்ணங்களும் சிதைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.