
நேற்று முன்தினம் வெளியான தகவலின்படி இஸ்ரேல் தனது வரலாற்றிலேயே மிக சிறப்பான மற்றும் முக்கியமான ராணுவ ஒப்பந்தம் ஒன்றை பெற்றுள்ளது.
அதாவது பராக்-எம் எக்ஸ் எனப்படும் வான் பாதுகாப்பு அமைப்புகளை மொராக்கோ நாட்டிற்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை இஸ்ரேல் பெற்றுள்ளது.
மொராக்கோ ஒரு காலத்தில் இஸ்ரேலின் தீவிர எதிரி நாடாகும் இன்று பல்வேறு இஸ்லாமிய நாடுகளை போல இஸ்ரேலுடன் நட்புறவை பேணி வருகிறது.
அந்த வகையில் இப்படி ஒரு இஸ்லாமிய நாட்டிற்கு இவ்வளவு முக்கியமான ஆயுத அமைப்பை இஸ்ரேல் ஏற்றுமதி செய்ய போவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.