உக்ரைன் ரஷ்ய விவகாரம் முற்றி விட்டது மீட்பு பணிகளை துவங்க உள்ளதாக இஸ்ரேல் அறிவிப்பு

  • Tamil Defense
  • February 12, 2022
  • Comments Off on உக்ரைன் ரஷ்ய விவகாரம் முற்றி விட்டது மீட்பு பணிகளை துவங்க உள்ளதாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேல் வெள்ளிக்கிழமை முதல் உக்ரைனில் இருந்து தனது நாட்டு மக்கள் மற்றும் பணியாளர்களை மீட்கும் பணிகளை துவங்கி உள்ளது, இதா தவிர அங்கு செல்வோருக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இதுபற்றி பேசிய மூத்த இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் உக்ரைன் ரஷ்ய விவகாரம் முற்றி விட்டதாகவும் ஆகவே தான் இஸ்ரேல் மீட்பு நடவடிக்கைகளை துவங்கி உள்ளதாகவும்

உக்ரைன் உடனான எல்லையோரம் ரஷ்யா ஒரு படையெடுப்புக்கு தேவையான அளவுக்கு படைகளை குவித்து உள்ளதாகவும் பெலாரஸ் மற்றும் கருங்கல் பகுதிகளில் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

உக்ரைன் விவகாரம் நிலைமை பற்றிய விரிவான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகே இந்த முடிவு இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் யேயிர் லபிட்டால் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இனி உக்ரைன் தலைநகர் க்யிவெவில் இஸ்ரேலிய தூதர் மற்றும் சொற்ப அளவிலான பணியாளர்கள் மட்டுமே தூதரக பணிகளை மேற்கொள்வர் எனவும் கூறப்படுகிறது.