பஞ்சாபில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டு வீழ்த்திய BSF !!

  • Tamil Defense
  • February 4, 2022
  • Comments Off on பஞ்சாபில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டு வீழ்த்திய BSF !!

எல்லை பாதுகாப்பு படையினர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஃபெரோஸ்பூர் செக்டாரில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தானியரை சுட்டு வீழ்த்தினர்.

எல்லை பாதுகாப்பு படையின் ரோந்து குழுவானது அத்தீமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் நபரை பலமுறை எச்சரித்தும் தொடர்ந்து கேட்காமல் சர்வதேச எல்லையை கடந்ததால் வீரர்கள் அவரை சுட்டு வீழ்த்தினர்.

இந்த சம்பவம் ஃபெரோஸ்பூர் செக்டார் பகுதியில் அமைந்துள்ள கே எஸ் வாலா எல்லையோர காவல் சாவடிக்கு அருகே நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.