6 மாதங்கள் தொடர்ந்து பறக்கும் புதிய இந்திய ட்ரோன் !!

இந்தியாவின் தேசிய ஏரோஸ்பேஸ் ஆய்வகம் (NAL) HAPS எனப்படும் புதிய ட்ரோன் ஒன்றை உருவாக்கி வருகிறது இந்த திட்டத்திற்கான நிதியை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் வழங்கி வருகிறது.

இந்த High Attitude Platform Station ஆளில்லா விமானத்தை அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வு கவுன்சில் CSIR மற்றும் NAL ஆகியவை கூட்டாக உருவாக்கி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது சூரிய ஒளியில் இயங்கும் திறன் கொண்டதாகவும், 20 கிலோமீட்டர் உயரத்தில் 6 மாதங்கள் தொடர்ந்து அனைத்து வகையான காலநிலைகளிலும் எவ்வித இடையூறும் இன்றி பறக்கும் ஆற்றலை கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த HAPS ஆளில்லா விமானமானது வானிலை ஆய்வு, பூமி ஆய்வு, புவிசார் தகவல் சேகரிப்பு, கண்காணிப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு விதமான பணிகளை மேற்கொள்ள பயன்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.