ஆழ்கடல் மீட்பு பணிகளில் பயிற்றுவிக்க DSRV சிமுலேட்டர்களை வாங்க விரும்பும் கடற்படை !!

  • Tamil Defense
  • February 7, 2022
  • Comments Off on ஆழ்கடல் மீட்பு பணிகளில் பயிற்றுவிக்க DSRV சிமுலேட்டர்களை வாங்க விரும்பும் கடற்படை !!

இந்தியா கடந்த சில வருடங்களாகவே தனது நீர்மூழ்கிகளின் எண்ணிக்கை மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளை அதிகரிக்க மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நீர்மூழ்கி நடவடிக்கைகளில் மிகவும் முக்கியமான ஆழ்கடல் மீட்பு திறன்களையும் இந்திய கடற்படை மேம்படுத்தி நிபுணத்துவம் பெற விரும்புகிறது.

அந்த வகையில் ஏற்கனவே இந்தியா மிக சொற்ப நாடுகளே இயக்கி வரும் ஆழ்கடல் மீட்பு வாகனங்களில் இரண்டை இங்கிலாந்து நிறுவனம் ஒன்றிடம் இருந்து வாங்கியுள்ளது.

தற்போது அவற்றின் ஆழ்கடல் நடவடிக்கைகளை, நிஜமான சூழல்களை அச்சு அசலாக உருவாக்கி பயிற்றுவிக்க உதவும் DSRV சிமுலேட்டர்களை இந்திய கடற்படை வாங்க விரும்புகிறது.

இதையொட்டி கடந்த ஜனவரி மாதம் பாதுகாப்பு அமைச்சகம் இத்தகைய இரண்டு சிமுலேட்டர்களுக்காக REQUEST FOR PROPOSALஐ விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.