இந்தியாவின் கடலோர பாதுகாப்பை உறுதிபடுத்துவதில் அளப்பரிய பங்களிப்பை இந்திய கடலோர பாதுகாப்பு படை மேற்கொண்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததே.
இந்த வருடம் இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கான முதன்மை செலவுக்கான பட்ஜெட் வரலாற்றில் இல்லாத அளவுக்கு சுமார் 60 சதவிகித உயர்வை சந்தித்து உள்ளது.
அதாவது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 2650 கோடி ரூபாயில் இருந்து தற்போது சுமார் 4246 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது.