1 min read
ஆயுத கிட்டங்கிகள் மற்றும் போக்குவரத்தை RFID சிப் மூலம் கண்காணிக்கும் நடைமுறை ஆரம்பம் !!
இந்திய தரைப்படை தனது ஆயுதங்களை RFID – RADIO FREQUENCY IDENTIFICATION தொழில்நுட்பம் கொண்ட சிப்களால் கண்காணிக்கும் நடைமுறையை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.
அந்த வகையில் இந்த நடைமுறையை பின்பற்றி கட்கியில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் இருந்து புல்காவனில் உள்ள மத்திய ஆயுத கிட்டங்கிக்கு முதலாவது தொகுதி 5.56 ரக தோட்டாக்கள் கொண்டு செல்லப்பட்டன.
இதனை தரைப்படையின் ஆர்டனன்ஸ் கோர் படையின் இயக்குனர் ஜெனரலான லெஃப்டினன்ட் ஜெனரல் குஷ்வாஹா மற்றும் கட்கி ஆயுத தொழிற்சாலை பொது மேலாளர் சிரிஷ் காரே ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர்.
இந்த புதிய நடைமுறையின் மூலமாக சிறப்பாக ஆயுதங்களின போக்குவரத்து, கிட்டங்கி மேலாண்மை பணிகளை கண்காணிக்க முடியும் என்பதும் செலவுகள் குறையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.