காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளின் முதுகெலும்பை உடைத்த கமாண்டர் ஒய்வு பெற்றார் !!

  • Tamil Defense
  • February 2, 2022
  • Comments Off on காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளின் முதுகெலும்பை உடைத்த கமாண்டர் ஒய்வு பெற்றார் !!

லெஃப்டினன்ட் ஜெனரல் கன்வால்ஜீத் சிங் தில்லோன் இந்திய தரைப்படையின் மூத்த அதிகாரிகளில் ஒருவர் ஆவார் காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளின் முதுகெலும்பை உடைத்த பெருமைக்கு உரியவர் ஆவார்.

1983ஆம் ஆண்டு ராஜ்புதானா ரைஃபிள்ஸ் ரெஜிமென்ட்டின் 4ஆவது பட்டாலியனில் தனது பணியை துவங்கிய அவர் நேற்று முன்தினம் 39 ஆண்டு கால சேவைக்கு பிறகு ஒய்வு பெற்றுள்ளார்.

காஷ்மீரிலேயே தனது பணிக்காலத்தின் பெரும்பகுதியை கழித்த அவருக்கு காஷீமீரின் கள நிலவரம் அத்துப்படி அங்கு 7ஆவது செக்டார் ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் படையின் கமாண்டராக பணியாற்றிய அவர்

பின்னாளில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குள் நடைபெறும் அனைத்து ராணுவ ஆபரேஷன்கள் மற்றும் அங்குள்ள படைகளுக்கு பொறுப்பான 15 கோர் அல்லது சினார் கோர் படையின் தளபதியாக பணியாற்றினார்.

அப்போது தான் படிப்படியாக பயங்கரவாத இயக்கங்களின் முக்கிய தலைவர்கள் தேடி தேடி கொல்லப்பட்டனர், மூளை சலவை செய்யப்பட்டு பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த இளைஞர்களை சரணடைய செய்து மன்னிப்பு வழங்கினார்.

கல்வி விளையாட்டு ஆகியவற்றை ஊக்குவித்தார், ராணுவம் துணை ராணுவம் காவல்துறை தனியார் நிறுவனங்கள் மூலமாக வேலை வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தார்.

இப்படி காஷ்மீர் மக்கள் ராணுவம் மீது வைத்திருந்த கண்ணோட்டத்தை மாற்றினார், நம்பிக்கலயை ஊட்டினார் இதனால் பயங்கரவாதிகளுக்கு இருந்து ஆதரவு மங்கி போனது இப்படி பயங்கரவாத இயக்கங்களின் முதுகெலும்பை உடைத்தார்.

புல்வாமா தாக்குதல் நடைபெற்ற அடுத்த 100 மணி நேரத்தில் அதற்கு மூளையாக செயல்பட்ட அனைவரும் தேடி தேடி கொல்லப்பட்டனர், ஆஃப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் யார் வந்தாலும் சரி எத்தனை பேர் வந்தாலும் சரி யாரும் உயிருடன் திரும்பி செல்ல முடியாது என தாலிபான்களை எச்சரித்தார்.

இவரது திறமையின் காரணமாக DEFENSE INTELLIGENCE AGENCY அமைப்பின் இயக்குனர் ஜெனரலாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்த நிலையில் ஒய்வு பெற்றுள்ளார், இவருக்கு பரம் விஷிஸ்ட் சேவா பதக்கம் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.