காஷ்மீரில் காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் நிரம்பிய கிராமத்தை தத்தெடுத்த இந்திய ராணுவம் !!

  • Tamil Defense
  • February 18, 2022
  • Comments Off on காஷ்மீரில் காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் நிரம்பிய கிராமத்தை தத்தெடுத்த இந்திய ராணுவம் !!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தோடா மாவட்டத்தில் உள்ள பதேர்வாஹ் கிராமத்தில் இருந்து 105 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ததாகி கிராமத்தை இந்திய தரைப்படை தத்தெடுத்து உள்ளது.

இந்த கிராமத்தில் சுமார் 105 குடும்பங்கள் வசித்து வருகின்றன இந்த நிலையில் அவற்றில் சுமார் 55 குடும்பங்களில் குறைந்தபட்சம் ஒருவருக்காவது பேசவோ அல்லது காது கேளாத நிலையோ உள்ளது.

இப்படி சுமார் 78 பேர் உள்ளனர் அவர்களில் 41 பெண்கள் மற்றும் 15 வயதுக்கு கீழே குழந்தைகள் 30 பேரும் ஆண்கள் 7 பேரும் அடக்கம், காது கேளாதோருக்கு அதற்கான கருவிகளை வழங்கிய ராணுவம் பின்னர்,

உடைகள்,உணவு, மருத்துவ வசதிகள் போன்றவற்றையும் தெலங்கானாவில் இருந்து பயிற்சியாளர்களை அழைத்து வந்து வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்கவும் ஏற்பாடு செய்துள்ளது.

இதையடுத்து ஒரு படி மேலே சென்று கிராமத்தை ராணுவம் தத்தெடுத்து உள்ளது, அங்கு உறைவிட வசதியுடன் கூடிய பள்ளி ஒன்றையும் நிர்மாணிக்க ராணுவம் முடிவ செய்துள்ளது, மேலும் இந்த குறைபாடுகளை களையவும் ராணுவம் முயன்று வருகிறது.

ஒரு குழந்தை பிறந்தால் அக்குழந்தையின் எதிர்காலத்தை நினைத்து அச்சபடும் நிலையில் அரசியல்வாதிகள் செய்யாததை எல்லாம இந்திய ராணுவம் தானாகவே முன்வந்து செய்வதால் மக்கள் நெகிழ்ந்து போயுள்ளனர்.