பொக்ரானில் நடைபெற உள்ள இந்திய விமானப்படையின் மிகப்பெரிய போர் ஒத்திகை !!

  • Tamil Defense
  • February 6, 2022
  • Comments Off on பொக்ரானில் நடைபெற உள்ள இந்திய விமானப்படையின் மிகப்பெரிய போர் ஒத்திகை !!

ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் வருகிற மார்ச் 5ஆம் தேதி இந்திய விமானப்படையின் வாயு ஷக்தி-2022 எனும் மெகா போர் பயிற்சி நடைபெற உள்ளது.

இந்த போர் ஒத்திகையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகள் மற்றும் பல முக்கிய அதிகாரிகள் பார்வையிட உள்ளனர்.

இதையொட்டி ஜெய்சால்மர் விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி க்ருப் கேப்டன் அமர்தீப் சிங் பன்னூ அம்மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.

அப்போது சாலை பராமரிப்பு, குடிநீர் வசதி, மின்சார வசதி , இணைய சேவை, மருத்துவ வசதி, பாதுகாப்பு, சாலை போக்குவரத்து சீர்படுத்துதல் போன்ற உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.

மேலும் இந்திய விமானப்படை இந்த போர் ஒத்திகைக்கான பணிகளை துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது இப்போதே ஜெய்சால்மரில் போர் விமானங்கள் குண்டு வீசும் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.