
அடுத்த வாரம் கடைசி தொகுதியில் உள்ள மூன்று ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்து சேர உள்ளன என பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஏற்கனவே இந்தியா வந்தடைந்த ரஃபேல் போர் விமானங்களில் 13 சிறப்பு தொழில்நுட்பங்களை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஆனால் RB008 என்ற எண் வரிசை கொண்ட ரஃபேல் போர் விமானம் ஒன்று மட்டும் ஃபிரான்ஸ் நாட்டிலேயே சிறப்பு அமைப்புகள் இணைத்து மேம்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இனி வரும் கடைசி தொகுதி ரஃபேல் போர் விமானங்கள் ஏற்கனவே இந்தியா வந்த ரஃபேல் விமானங்களை போன்று எரிபொருள் டேங்கர் விமானங்களின் உதவியோடு தொடர்ச்சியாக பறந்து இந்தியா வர உள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.