80 ஆஃப்கன் ராணுவ பயிற்சி அதிகாரிகளுக்கு பயற்சி வழங்கும் இந்தியா !!

இந்தியாவில் முந்தைய ஆஃப்கானிஸ்தான் ஆட்சியாளர்கள் காலத்தின் போது வந்து பல ராணுவ பயிற்சி அதிகாரிகள் பயிற்சி பெற்றனர்.

இவர்களின் பயிற்சி காலம் நிறைவு பெற்றதையடுத்து சொந்த நாட்டிற்கு தாலிபான்களின் ஆட்சி மற்றும் அடாவடித்தனம் காரணமாக செல்ல முடியாமல் சிக்கி கொண்டனர்.

இந்த நிலையில் இந்த 80 பயிற்சி அதிகாரிகளை இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார திட்டத்தின் கீழ் 12 மாத ஆங்கில பயிற்சி அளிக்க உள்ளனர் ஆகவே சில காலம் அவர்கள் இங்கு தங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தில்லியில் இயங்கி வரும் ஆஃப்கானிஸ்தான் தூதரகம் வரவேற்றுள்ளது, முந்நாள் ஆஃப்கன் ஜனநாயக அரசின் பணியாளர்கள் இன்னமும் இந்த தூதரகத்தை இயக்கி வருவது கூடுதல் தகவல் ஆகும்.