ஹெலிகாப்டர் மூலம் ஏவப்படும் சுதேசி சப்சானிக் கப்பல் எதிர்ப்பு எவுகணை விரைவில் சோதனை !!

  • Tamil Defense
  • February 6, 2022
  • Comments Off on ஹெலிகாப்டர் மூலம் ஏவப்படும் சுதேசி சப்சானிக் கப்பல் எதிர்ப்பு எவுகணை விரைவில் சோதனை !!

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வடிவமைத்து தயாயித்துள்ள குறுந்தூர கப்பல் எதிர்ப்பு ஏவுகணையின் சோதனை இந்த ஆண்டு மத்தியில் நடைபெற உள்ளது.

இந்த ஏவுகணை மிகுந்த விலைமதிப்பு கொண்ட மேற்கத்திய ஏவுகணைகளான Naval Strike, Marte ER, Sea Venom ஆகியவற்றிற்கான இந்திய மாற்றாக இருக்கும் என நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹெலிகாப்டர்களில் இருந்து ஏவப்படும் 380 கிலோ எடை கொண்ட இந்த சப்சானிக் ஏவுகணையானது 100 கிலோ வெடிமருந்தை சுமந்து சென்று சிறு மற்றும் நடுத்தர கப்பல்களை வெற்றிகரமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகும்.

இது 5 கிலோமீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வரையிலான தூரம் செல்லும் மேலும் குறைந்தபட்சமாக 91 மீட்டர் தொலைவு மற்றும் அதிகப்படியாக 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளையும் தாக்கி அழிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.