டோர்னியர் ரோந்து விமானத்தில் துப்பாக்கி பொருத்த முடிவு !!

  • Tamil Defense
  • February 9, 2022
  • Comments Off on டோர்னியர் ரோந்து விமானத்தில் துப்பாக்கி பொருத்த முடிவு !!

இந்திய கடலோர காவல்படை தனது டோர்னியர் ரோந்து விமானங்களில் Gsh-23 ரக ஆட்டோமெட்டிக் கனரக துப்பாக்கி அமைப்புகளை பொருத்த முடிவு செய்துள்ளது.

இந்த Gsh-23 ஒரு தலா 23 மில்லிமீட்டர் இரட்டை குழல் துப்பாக்கி அமைப்பாகும் ஒரு நிமிடத்திற்கு சுமார் 3000 தோட்டாக்களை சுடும் ஆற்றல் கொண்டதாகும்.

ஏற்கனவே இத்தகைய துப்பாக்கி அமைப்புகள் இந்திய விமானப்படையின் மிக்-21,23,27, தேஜாஸ் மற்றும் மி-24/35 ஆகிய வானூர்திகளில் பயன்படுத்தி வரப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சில டோர்னியர் ரக ரோந்து விமானங்களில் 7.62mm தோட்டாக்களை சுடும் துப்பாக்கி பொருத்தப்பட்டு உள்ள நிலையில் அவற்றை 12.7mm ரக துப்பாக்கி அமைப்புகளை கொண்டு மேம்படுத்த உள்ளனர் என்பது கூடுதல் தகவல் ஆகும்.