மத்திய மற்றும் கிழக்கு சீன எல்லையோரம் கே-9 பிரங்கிகளை களமிறக்கும் இந்திய தரைப்படை !!

  • Tamil Defense
  • February 9, 2022
  • Comments Off on மத்திய மற்றும் கிழக்கு சீன எல்லையோரம் கே-9 பிரங்கிகளை களமிறக்கும் இந்திய தரைப்படை !!

லடாக்கில் இந்திய தரைப்படை வெற்றிகரமாக கே-9 ரக பிரங்கிகளை வெற்றிகரமாக நிலைநிறுத்தி அவற்றை இயக்கி திருப்தி அடைந்தது.

இந்த நிலையில் மேலதிகமாக சுமார் 200 கே-9 பிரங்கிகளை வாங்கவும் லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்துடன் இந்திய தரைப்படை ஒப்பந்தம் செய்து கொண்டது.

இந்த நிலையில் சீனா உடனான எல்லையோர பகுதியில் குறிப்பாக மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் இந்த வகை பிரங்கிகளை களமிறக்க இந்திய தரைப்படை விரும்புகிறது.

இந்த மேட் இன் இந்தியா கே-9 பிரங்கிகள் எல்லையோரம் சீன அச்சுறுத்தலின் போது மலையோர பகுதிகளில் எவ்வித தடையும் இன்றி, வெற்றிகரமாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.