காவல்துறையை நவீனப்படுத்த மெகா திட்டம் சுமார் 26,000 கோடி ஒதுக்கீடு !!

  • Tamil Defense
  • February 14, 2022
  • Comments Off on காவல்துறையை நவீனப்படுத்த மெகா திட்டம் சுமார் 26,000 கோடி ஒதுக்கீடு !!

மத்திய அரசு இந்தியாவின் காவல்துறையை நவீனப்படுத்த சுமார் 26 ஆயிரத்து 275 கோடி ரூபாயை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது.

இது ஒரு மெகா காவல்துறை நவீனமயமாக்கல் திட்டம் எனவும் 2025-2026 நிதியாண்டு வரையிலான காலகட்டம் வரை மேற்குறிப்பிட்ட நிதி தொகை பயன்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள காவல்துறைகளை மேம்படுத்தும் நீண்ட கால திட்டம் என்பது கூடுதல் தகவல் ஆகும்.

இந்த மெகா திட்டம் உள்நாட்டு பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் காவல்துறையில் நவீன தொழில்நுட்பத்தை உள் புகுத்துவது தொடர்பானது என்பது குறிப்பிடத்தக்கது.