1 min read
ட்ரோன் இறக்குமதிக்கு தடை விதித்த இந்தியா !!
கடந்த 9 ஆம் தேதி முதல் இந்திய அரசு உள்நாட்டு ட்ரோன் தயாரிப்பை ஊக்குவிக்கும் விதமாக வெளிநாடுகளில் இருந்து ட்ரோன்களை இறக்குமதி செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது ஆனால் ஆராய்ச்சி, பாதுகாப்பு, ராணுவம் தொடர்பான இறக்குமதிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, 2030ஆம் ஆண்டு வாக்கில் இந்தியா உலகின் முன்னனி ட்ரோன் தயாரிப்பு நாடாக விரும்புவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு ட்ரோன்கள் தயாரிப்பு துறையின் மதிப்பு 800 மில்லியன் ருபாயில் இருந்து சுமார் 9 பில்லியன் ரூபாய் வரை அடுத்த மூன்று ஆண்டுகளில் அதிகரிக்கும் எனவும் 2026 வாக்கில் இது சுமார் 150 பில்லியன் ரூபாயாக அதிகரிக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.