சமீபத்தில் ஃபிலிப்பைன்ஸ் அரசு அந்நாட்டு கடற்படைக்கு சுமார் 375 மில்லியன் டாலர் மதிப்பிலான பிரம்மாஸ் ஏவுகணை அமைப்புகளை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்ட நிலையில் விரைவில் அடுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என கூறப்படுகிறது.
அதாவது இந்த முறை ஃபிலிப்பைன்ஸ் தரைப்படைக்காக மறுசீரமைக்கப்பட்ட ஃபிலிப்பைன்ஸ் முப்படைகளின் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் இந்த ஏற்றுமதி ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் செய்து கொண்ட ஒப்பந்தம் மேற்குறிப்பிட்ட நவீனமயமாக்கல் திட்டத்தின் இரண்டாவது கட்டம் (2018-2022) எனவும், அடுத்த ஒப்பந்தம் முன்றாவது கட்டத்தை (2023-2027) சேர்ந்ததாக இருக்கும் என ஃபிலிப்பைன்ஸ் ராணுவ செய்தி தொடர்பாளர் கர்னல் செர்சிஸ் ட்ரினிடாட் கூறினார்.
இந்த பிரம்மாஸ் ஏவுகணை அமைப்புகள் அனைத்துமே ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் எல்லைகளில் அத்துமீறும் போர் கப்பல்களை தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.