உள்நாட்டு உளவு அமைப்பில் மத்திய அரசின் மறுசீரமைப்பு பணிகள் !!

  • Tamil Defense
  • February 4, 2022
  • Comments Off on உள்நாட்டு உளவு அமைப்பில் மத்திய அரசின் மறுசீரமைப்பு பணிகள் !!

இந்தியாவின் உள்நாட்டு உளவு அமைப்பான இன்டலிஜென்ஸ் பியூரூவில் மத்திய அரசு பல்வேறு மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் ஜனவரி 31 அன்று பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் 10 புதிய துணை இயக்குனர், 80 இணை இயக்குனர், 358 துணை மத்திய உளவுத்துறை அதிகாரி, 1110 இணை மத்திய உளவுத்துறை அதிகாரி, 442 பாதுகாப்பு உதவியாளர் என 2000 பணியிடங்களை உருவாக்கவும்

அதே நேரத்தில் சுமார் 2000 இரண்டாம் நிலை இணை மத்திய உளவுத்துறை அதிகாரிக்கான பணியிடங்களை ரத்து செய்யவும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த மறுசீரமைப்பு பணிகளை சார்ந்த அனைத்து செலவுகளும் 2022-2023ஆம் நிதியாண்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள பட்ஜெட்டில் இருந்து எடுத்து கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.