1 min read
அமெரிக்க ட்ரோன்களை வாங்கும் இந்திய திட்டம் ஒத்திவைப்பு !!
இந்தியா அமெரிக்காவிடம் இருந்து சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் 30 MQ-9 PREDATOR ட்ரோன்களை வாங்க திட்டமிட்டு இருந்தது.
ஆனால் தற்போது உள்நாட்டிலேயே ஆயுதம் தாங்கிய ட்ரோன்கள் தயாரிக்கும் திறன் வந்திருப்பதால் இந்த ஒப்பந்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் DRDO தனது MALE ரக ஆயுதம் தாங்கிய ட்ரோன்களை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், HAPS ரக ட்ரோன்களை கண்காணிப்பு மற்றும் இலக்குகளை அடையாளம் காணும் பணிகளுக்கு பயன்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்குறிப்பிட்ட MQ-9 ட்ரோன்களை இந்திய தரைப்படை கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவை தலா 10 எனும் எண்ணிக்கையில் பெற இருந்தது குறிப்பிடத்தக்கது.