ஃபிலிப்பைன்ஸ் நாட்டு படைகள் அந்நாட்டின் மராவி பகுதியில் ஐ.எஸ் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளை வேரோடு அழிக்க நடத்திய நீண்ட போராட்டத்தில் பல பாடங்களை கற்று கொண்டன.
அதன் ஒரு பகுதியாக இரவில் பாரக்கும் கருவிகளுக்கான தேவையை உணர்ந்த ராணுவம் அவற்றை வாங்க ஒரு சர்வதேச அளவிலான டென்டரை கடந்த ஆண்டு நவம்பர் வெளியிட்டது.
இந்தியாவின் MKU, ஃபிலிப்பைன் கெம்ஸ்டீல் மற்றும் பான்பிஸ்கோ டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்கள் கலந்து கொண்ட இந்த டென்டரில் இந்தியாவின் MKU வெற்றி பெற்று கடந்த ஆண்டு நவம்பர் மாதமே ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி 661 Netro NM-3000 night vision monocular பார்வை கருவிகள், 661 அகச்சிவப்பு கதிர் குறிபார்க்கும் கருவிகள் மற்றும் 66 லேசர் கருவிகளை இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு முன்னர் டெலிவரி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.