மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி 29 ஆண்டுகளுக்கு பிறகு கைது !!

  • Tamil Defense
  • February 5, 2022
  • Comments Off on மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி 29 ஆண்டுகளுக்கு பிறகு கைது !!

கடந்த 1993ஆம் ஆண்டு மும்பை மாநகரில் 12 இடங்களில் அடுத்தடுத்து வெடித்த குண்டுகளால் சுமார் 257 பேர் உயிரிழந்தனர் மேலும் 713 பேர் காயமடைந்தனர்.

கைது செய்யப்பட்ட அபு பக்கார் பாகிஸ்தானில் பயிற்சி பெற்று குண்டுவெடிப்புக்கான RDX ரக வெடிமருந்தை மும்பை கொண்டு சேர்த்தது தாவூத் இப்ராஹீம் உடன் திட்டம் தீட்டியது என குண்டுவெடிப்பில் மிக முக்கிய தொடர்புடையவன் ஆவான்.

இவன் பாகிஸ்தானிலும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் வாழந்து வந்த நிலையில் இந்திய ஏஜென்சிகள் அளித்த தகவல்களின் அடிப்படையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் காவல்துறை இவனை 2019ஆம் ஆண்டு கைது செய்தது.

இந்த நிலையில் அவனை இந்தியா கொண்டு வர நமது அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் இங்கு கொண்டு வந்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.