தில்லியில் வெடிகுண்டு கண்டுபிடிப்பால் ஏற்பட்ட பதட்டம் !!

  • Tamil Defense
  • February 19, 2022
  • Comments Off on தில்லியில் வெடிகுண்டு கண்டுபிடிப்பால் ஏற்பட்ட பதட்டம் !!

தலைநகர் தில்லியில் நேற்று இரண்டு வெவ்வேறு இடங்களில் மர்ம பைகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக காவல்துறைக்கு தகவல் வந்த நிலையில்

சீமாபுரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது அதனை தேசிய பாதுகாப்பு படையினர் கைபற்றி சென்று பத்திரமாக செயலிழக்க செய்தனர்.

கடந்த மாதம் காஸிபூர் பகுதியில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு தேசிய பாதுகாப்பு படையினரால் செயலிழக்க வைக்கப்பட்டதும்

இரண்டு வெடிகுண்டுகளுமே ஒரு வகையான வெடிமருந்துகளால் செய்யப்பட்டவை என்பதும் இதன் தீவிரத்தன்மையை உணர்த்துகின்றன.

மேலும் இது தொடர்பாக தில்லி காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.