முதல் முறையாக நீரில் தரையிறங்கி மேலேழும்பும் விமானத்தை தயாரிக்க உள்ள இந்தியா !!

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் இந்திய வரலாற்றில் முதல் முறையாக நீரில் தரையிறங்கி மேலேழும்பும் விமானத்தை தயாரிக்க உள்ளது.

இதற்காக அந்த நிறுவனம் ஏற்கனவே தயாரித்து வரும் தரையில் தரையிறங்கி மேலேழும்பும் டோர்னியர் Do228 ரகத்தை இந்த திட்டத்திற்கு தேர்வு செய்துள்ளது.

இந்த விமானத்தில் சக்கரங்களுக்கு பதில் மிதவைகள் மாட்டப்படும் பின்னர் நீரில் தரையிறங்கும் அழுத்தத்தை சமாளிக்க இதன் உடல் வலுப்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன இந்த விமானத்திற்கு டோர்னியர் சீ பிளேன்-228 என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த விமானத்தை இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படைகள் ஆகியவை ரோந்து மேற்கொள்ள வாஙாகலாம் நீண்ட நாட்களாக இத்தகைய விமானத்தை ஜப்பானிடம் இருந்து இந்தியா வாங்க முயன்றது குறிப்பிடத்தக்கது.

இது தவிர உடான் திட்டத்தில் நீர்வழி விமான நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன அவற்றில் பயணிகள் போக்குவரத்திற்காகவும் இவற்றை விமான நிறுவனங்கள் வாங்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.