ரஷ்யா உடனான எரிபொருள் குழாய் திட்டத்தை நிறுத்திய ஜெர்மனி !!
1 min read

ரஷ்யா உடனான எரிபொருள் குழாய் திட்டத்தை நிறுத்திய ஜெர்மனி !!

சமீபத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் உக்ரைனுடைய டோனெட்ஸ்க் மற்றும் லூஹான்ஸ்க் பகுதிகளை சுதந்திர நாடுகளாக பிரகடனம் செய்தார்.

இதனையடுத்து அந்த பகுதிளில் அமைதியை நிலைநாட்டும் பணிகளை மேற்கொள்ள ரஷ்ய தரைப்படை அணிகளை அமைதி காக்கும் படையாக அனுப்பி வைத்தார்.

இதற்கு பதிலடியாக ஜெர்மனி அரசு, ரஷ்யா உடனான NORD எரிபொருள் குழாய் பதிப்பு திட்டத்தை நிறுத்தி உள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்கு வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் ஜென் ஸாகி அமெரிக்க அரசு சார்பில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து ஐந்து மிக முக்கியமான ரஷ்ய வங்கிகள் மற்றும் மூன்று ரஷ்ய தொழிலதிபர்கள் மீது பொருளாதார தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது கூடுதல் தகவல் ஆகும்.