2021-2022 நிதியாண்டில் இந்தியாவின் முப்படைகளும் தங்களுக்கு தளவாடங்கள் கருவிகள் வாங்க ஒதுக்கப்பட்ட பணத்தில் சுமார் 64 சதவிகிதத்தை இந்திய தயாரிப்பு பொருட்கள் வாங்க பயன்படுத்தி உள்ளனர்.
இந்திய தரைப்படை 21,000 கோடி ருபாயையும், இந்திய விமானப்படை 17,400 கோடியும், இந்திய கடற்படை 3,300 கோடியும் செலவு செய்யாமல் பாக்கி வைத்துள்ளன, ஆனால் முப்படைகளும் கடைசி நேரம் வரை அதை செலவு செய்ய முயற்சி செய்துள்ளன.
ஆக இந்திய தரைப்படை தனக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 72% செலவு செய்துள்ள நிலையில் இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படை ஆகியவற்றை விடவும் நிதி கையாளும் திறனில் பின் தங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.