
இந்திய கடற்படையின் ஆறு கல்வாரி ரக நீர்மூழ்கிகளில் ஐந்தாவது நீர்மூழ்கி செவ்வாய்கிழமை அன்று முதலாவது கடல் சோதனைகளை துவங்கி உள்ளது.
யார்ட்11879 என தற்போது அழைக்கப்படும் இந்த நீர்மூழ்கியானது கடல்சோதனைகள் நிறைவுபெற்று படையில் இணையும் போது ஐ.என்.எஸ். வாகிர் என பெயரிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் அமைந்துள்ள பொதுத்துறை நிறுவனமான மஸகான் கப்பல் கட்டுமான தளம் ஃபிரான்ஸ் நாட்டின் நேவல் க்ருப் உடன் இணைந்து இவற்றை கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.