ராணுவத்தின் முகநூல், இன்ஸ்டாகிராம் பக்கங்களை காரணமின்றி முடக்கிய ஃபேஸ்புக் !!

  • Tamil Defense
  • February 10, 2022
  • Comments Off on ராணுவத்தின் முகநூல், இன்ஸ்டாகிராம் பக்கங்களை காரணமின்றி முடக்கிய ஃபேஸ்புக் !!

இந்திய தரைப்படையின் மிக முக்கியமான படைப்பிரவுகளுள் ஒன்று சினார் கோர் அல்லது 15ஆவது கோர், ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் அனைத்து ராணுவ நடவடிக்கைகளுக்கும் இப்படை பிரிவு தான் பொறுப்பாகும்.

கடந்த ஒரு வார காலமாக இப்படை பிரிவின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை முகநூல் நிர்வாகம் காரணம் ஏதுமின்றி முடக்கி வைத்துள்ளதாக ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இந்த விவகாரம் முகநூல் நிறுவனத்தின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

மேற்குறிப்பிட்ட பக்கங்கள் சினார் கோரின் அதிகாரப்பூர்வ பக்கங்களாகவும் அவர்களது நடவடிக்கை பற்றிய தகவல்களை வழங்கும் தளமாகவும் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.