பல ஆண்டுகளாக இங்கிலாந்து விமானப்படை விஐபி போக்குவரத்திற்காக பயன்படுத்தி வந்த நான்கு BAE-146 ரக விமானங்களை சமீபத்தில் படைவிலக்கம் செய்தது.
இந்த நிலையில் அவற்றிற்கு மாற்றாக இரண்டு புதிய ஃபால்கன் 900LX ரக போக்குவரத்து விமானங்களை ஃபிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சுமார் 109 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த விமானங்களை இங்கிலாந்து விமானப்படையின் 32ஆவது படையணி இயக்கும் என கூறப்படுகிறது.
இந்த விமானங்களில் அதிநவீன ஜாம்மர் கருவிகள், தகவல் தொடர்பு வசதிகள் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு/ தடுப்பு அமைப்புகள் போன்றவை பொருத்தப்படும் என்பது கூடுதல் தகவல் ஆகும்.