DRDO உருவாக்க உள்ள எஸ்400க்கு இணையான புதிய வான் பாதுகாப்பு ஏவுகணை !!

  • Tamil Defense
  • February 5, 2022
  • Comments Off on DRDO உருவாக்க உள்ள எஸ்400க்கு இணையான புதிய வான் பாதுகாப்பு ஏவுகணை !!

நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது ஒரு தொலைதூர இடைமறிப்பு ஏவுகணை ஒன்றை தயாரிக்க உள்ளது, இது எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்பிற்கு இணையாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே உள்ள 150 கிலோமீட்டர் தொலைவுக்கு செல்லக்கூடிய நீண்ட தூர இடைத்தூர வானிலக்கு ஏவுகணையை தூரம் நீட்டிக்கப்பட்ட தொலைதூர வானிலக்கு ஏவுகணையுடன் (350 கிலோமீட்டர் தூரம் செல்லக்கூடியது) இணைத்து பயன்படுத்த உள்ளனர்.

இவை இரண்டுமே செங்குத்தாக ஏவப்படும் வகையில் வடிவமைக்கப்படுப்பட்டவை ஆகும், இவற்றின் என்ஜின் திறன்கள் அதிக தொலைவு செல்லும் வகையில் மேம்படுத்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொலைவு அதிகரிக்கப்பட்ட வானிலக்கு ஏவுகணைகளுக்கு பலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு திறன்களும் இருக்கும் எனவும் இரண்டு வகையான ஏவுகணைகளுமே ஒரே வாகனத்தில் இருந்து ஏவப்படும் எனவும் கூறுகின்றனர்.