மியான்மரில் மிகப்பெரிய உள்நாட்டு போர் வெடிக்கும் அபாயம் !!

  • Tamil Defense
  • February 3, 2022
  • Comments Off on மியான்மரில் மிகப்பெரிய உள்நாட்டு போர் வெடிக்கும் அபாயம் !!

மியான்மரில் ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே நாளுக்கு நாள் சண்டை அதிகரித்து கொண்டே வருகிறது, கிளர்ச்சியாளர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் எனவும் கூறப்படுகிறது.

நாடு முழுவதும் சண்டை பரவி உள்ளதாகவும் முன்னர் நகர்ப்புற பகுதிகளை எட்டாமல் இருந்த சண்டை தற்போது நகரங்களிலும் நடைபெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வரை கொல்லப்பட்டோரின் தெளிவான எண்ணிக்கை தெரியவில்லை என்றாலும் கடந்த ஆண்டு ஃபெப்ரவரி முதல் தற்போது வரை சுமார் 12,000 பேர் ராணுவத்தால் கொல்லப்பட்டு இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆரம்ப கட்டத்தில் பலர் ராணுவம் கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறை காரணமாக இறந்த நிலையில் தற்போது பெரும்பாலான மரணங்கள் சண்டை காரணமாக நிகழ்வது குறிப்பிடத்தக்கது.

மியான்மர் ராணுவத்தை எதிரத்து சண்டையிடும் பல குழுக்கள் ஒன்றினைந்து மக்கள் பாதுகாப்பு படை என்ற படையை கூட்டாக அமைத்து உள்ளனர் என்பது கூடுதல் தகவல் ஆகும்.