
ஆஸ்திரேலியா வெளியுறவு அமைச்சர் மேரீஸ் பெய்னை மெல்போர்னில் இந்திய வெளியுறவு அமைச்சர் சந்தித்து பேசிவிட்டு ஊடகங்களை சந்தித்தார்.
அப்போது அவர் இந்திய உடனான எல்லையோரம் படைகளை சீனா குவித்துள்ளது அந்நாடு இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதியை அத்துமீறிய செயல் என குறிப்பிட்டார்.
சீனா போன்ற ஒரு மிகப்பெரிய நாட்டின் இத்தகைய அத்துமீறிய செயல்பாடுகள் நிச்சயமாக சர்வதேச சமுகத்திற்கு கவலை அளிக்கும் விஷயமாக தான் இருக்கும் எனவும் அவர் கூறினார்.