இந்தியாவை அச்சுறுத்தும் சீன விமானப்படையின் தொலைதூர விமானங்கள் !!

இந்தியா உடனான எல்லையோரம் சீனா தனது விமானங்களை அதிக உயரத்தில் பறக்க வைப்பதற்காக அதிக நீளம் கொண்ட விமான ஒடுதளங்களை திபெத் மற்றும் ஸின்ஜியாங் பகுதிகளில் அமைத்து வருகிறது.

மேலும் அதிக அளவிலான போக்குவரத்து மற்றும் எரிபொருள் டேங்கர் ரக விமானங்களை படையில் இணைத்து படை நகர்த்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னர் சீன விமானப்படை விமானங்கள் முழு அளவிலான எரிபொருள் மற்றும் ஆயுத சுமையுடன் பறக்க இயலாத நிலை இருந்தது.

இந்த நிலையில் எரிபொருள் டேங்கர் விமானங்களை கொண்டு போர் விமானங்களை குறைந்த எரிபொருள் மற்றும் அதிக ஆயுதங்களுடன் புறப்பட வைத்து பின்னர் எரிபொருள் டேங்கர்களை வைத்து எரிபொருள் நிரப்பி பறக்க வைக்க முடியும்.

அதே நேரத்தில் இந்திய விமானப்படையிடம் எரிபொருள் டேங்கர்கள் பற்றாக்குறை கடுமையாக உள்ளது, தற்போது பிரம்மாஸ், ரூத்ரம்1 மற்றும் ரூத்ரம்2 ஆகிய தொலைதூர ஏவுகணைகளை கொண்டு தான் சீன விமானங்களுக்கு செக் வைக்க முடியும் எனும் நிலை உள்ளதால் தான் எஸ்400 அமைப்புகளை பெற தீவிரமாக முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.