ரஷ்யா மீது மேற்கு நாடுகள் நடவடிக்கை எடுத்தால் சீனாவுடன் ரஷ்யா கைகோர்க்கும் அபாயம் !!

  • Tamil Defense
  • February 2, 2022
  • Comments Off on ரஷ்யா மீது மேற்கு நாடுகள் நடவடிக்கை எடுத்தால் சீனாவுடன் ரஷ்யா கைகோர்க்கும் அபாயம் !!

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் உலகளாவிய SWIFT பொருளாதார கட்டமைப்பில் இருந்து ரஷ்யாவை விலக்கி அதன் பொருளாதாரத்தை சிதைக்கவும்

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் ரஷ்ய எரிபொருள்களின் இறக்குமதியை நிறுத்தி மறுபடியும் ரஷ்ய பொருளாதாரத்தை சிதைக்கவும் திட்டமிட்டு உள்ளன.

இப்படி செய்தால் சீனாவுடன் ரஷ்யா தொடர்பை வலுப்படுத்தும் நிலை உருவாகும் மேலும் சீனாவுக்கு ரஷ்யா தனது எரிபொருளை விற்பனை செய்யும்.

ஐரோப்பாவுக்கான எரிபொருள் நிறுத்தப்பட்டதும் ரஷ்யாவுக்கு அந்த எரிபொருளை விற்று பணமாக்க வேண்டிய இக்கட்டான நிலை ஏற்படும்.

அப்போது தனது பெரும்பாலான கச்சா எண்ணெய் தேவைகளை அரேபியாவில் இருந்து இந்திய பெருங்கடல் வழியாக இறக்குமதி செய்யும் சீனாவுக்கு

இந்திய பெருங்கடல் வழியாக வரும் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு பாதுகாப்பு இல்லை என்பதும் போர் மூண்டால் இந்தியா மலாக்கா ஜலசந்தி வழியாக செல்லும் அந்த போக்குவரத்தை நிறுத்தி விடும் என்பதும் தெரியும்.

இதனால் ரஷ்யாவுடன் நில எல்லையை கொண்டுள்ள சீனா நிலம் மாரக்கமாக கச்சா எண்ணெய் பெறுவதை விரும்பும் காரணம் பாதுகாப்பு தான் இப்படி ரஷ்யா சீனா நெருங்கும் சூழல் உருவாகும்.

இது புவிசார் அரசியலில் பலத்த மாற்றங்களை ஏற்படுத்தும் நிச்சயமாக இந்தியாவுக்கும் இது பின்னடைவாகவே அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.