ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்தில் சீன கடற்படையின் கப்பலொன்று தனது நாட்டின் ரோந்து விமானங்கள் மீது ராணுவ தரத்திலான லேசர் ஒளிக்கதிர்களை வீசியதாக கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது போன்ற தான் தோன்றித்தனமான செயல்பாடுகளால் உயிர் சேதம் ஏற்படவும் வாய்ப்புள்ளதாகவும் கூறி இத்தகைய பாதுகாப்பற்ற ராணுவ செயல்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாக கூறியுள்ளது.
ஆஸ்திரேலிய விமானப்படைக்கு சொந்தமான போயிங் பி8ஏ ரக விமானம் மீது அரஃபுரா கடல்பகுதியில் பயணித்து இரண்டு சீன போர் கப்பல்களில் ஒன்று தான் லேசர் கதிர்களை வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.