
சீனாவின் புதிய ஷியான் H-20 ரக குண்டுவீச்சு போர் விமானம் உலகளவில் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் மற்றொரு புதிய சீன போர் விமானம் பற்றிய தகவல் ஒன்றும் உலா வருகிறது.
JH-XX என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய விமானம் உலக அளவில் பல்வேறு நாடுகளின் பாதுகாப்பு வல்லுநர்களை தங்களது புருவங்களை உயர்த்த வைத்துள்ளது என்றால் மிகையாகாது.
அமெரிக்கா தயாரித்த உலகின் மிகவும் அதிநவீன போர் விமானமான F22 ரேப்டரால் உந்தப்பட்டு சீனா இந்த அடுத்த தலைமுறை போர் விமானத்தை தயாரிப்பதாக கூறப்படுகிறது.