6 லட்சம் ட்ரோன்களை தயாரிக்க உள்ள சென்னை நிறுவனம் !!
1 min read

6 லட்சம் ட்ரோன்களை தயாரிக்க உள்ள சென்னை நிறுவனம் !!

சென்னையை தளமாக கொண்டு இயங்கி வரும் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் 2025ஆம் ஆண்டுக்குள்ளாக சுமார் 6 லட்சம் ட்ரோன்களை தயாரிக்க உள்ளது.

இது கிசான் ட்ரோன் என்ற திட்டத்தின்கீழ் விவசாயம் சார்ந்த ட்ரோன்களை தயாரிக்கும் திட்டமென்பதும் இதன் காரணமாக சுமார் 6 லட்சம் வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் தங்களது நிலங்களில் உரங்கள், பூச்சிகொல்லி மருந்துகள் போன்றவற்றை பயன்படுத்த இந்த ட்ரோன்களை பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது இதன் சிறப்பாகும்.

ஹரியானா மாநிலம் குர்காவன் மற்றும் தமிழக தலைநகர் சென்னை ஆகிய நகரங்களில் அமைந்துள்ள கருடா நிறுவனத்தின் தயாரிப்பு மையங்களில் தயாரிப்பு பணிகள் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.