எல்லையோர மக்களுக்கு ட்ரோன்கள் கண்காணிக்க BSF விழிப்புணர்வு பயிற்சி !!

  • Tamil Defense
  • February 6, 2022
  • Comments Off on எல்லையோர மக்களுக்கு ட்ரோன்கள் கண்காணிக்க BSF விழிப்புணர்வு பயிற்சி !!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் உடனான 198 நீளமான எல்லை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ட்ரோன்களை கண்காணிக்க எல்லை பாதுகாப்பு படையினர் விழிப்புணர்வு முகாம் முலமாக பயிற்சி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் இதுவரை சுமார் 140 விழிப்புணர்வு முகாம்களை எல்லை பாதுகாப்பு படையினர் நடத்தி உள்ளனர், அர்னியா, அக்னூர், ஆர் எஸ் புரா ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே பதாகைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

எல்லை பாதுகாப்பு படையின் வீரர்கள் கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப கண்காணிப்புகள் ஒருபுறம் இருக்க மறுபுறம் எல்லையோர கிராம மக்களும் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுச்சேத்கர் கிராமத்தை சேர்ந்த தயான் சிங் கூறும்போது எல்லைக்கு அப்பால் இருந்து வரும் ட்ரோன்கள் ஆயுதங்கள், வெடிகுண்டு மற்றும் போதை பொருட்கள் வருவதாக கூறுகிறார்.

அதே கிராமத்தை சேர்ந்த முன்னாள் தரைப்படை வீரரான சுராம் சந்த் பேசும்போது தற்போது எல்லையோர கிராம மக்கள் எல்லை பாதுகாப்பு படையின் மூன்றாவது கண்களாக விளங்குவதாக கூறினார்.