எல்லையோரம் BSF ஆபரேஷன், 9 பாகிஸ்தான் படகுகள் பறிமுதல் !!

  • Tamil Defense
  • February 11, 2022
  • Comments Off on எல்லையோரம் BSF ஆபரேஷன், 9 பாகிஸ்தான் படகுகள் பறிமுதல் !!

குஜராத் மாநிலத்தில் உள்ள ராண் ஆஃப் கட்ச் பகுதியில் உள்ள க்ரீக் எனும் பகுதியில் எல்லை பாதுகாப்பு படை 9 பாகிஸ்தான் படகுகளை நேற்று பறிமுதல் செய்துள்ளது.

எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் என்றும் போல் ரோந்து செல்லும் போது ஆளில்லா விமானம் மூலமாகவும் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ட்ரோன்கள் மூலமாக ஹராமி நாலா பகுதியில் பாக் படகுகள் இருப்பதை அறிந்து வீரர்கள் அதிவேக படகுகளில் சென்று பாக் படகுகளை பறிமுதல் செய்தனர்.

இதை தொடர்ந்து ராண் ஆஃப் கட்ச் பகுதியில் பரவலாக எல்லை பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருவதாக குஜராத் களப்பகுதி அதிகாரி மாலிக் தெரிவித்தார்.