எல்லையோர சாலை கட்டுமான அமைப்பின் பட்ஜெட் முதல் முறையாக 40% உயர்வு !!

  • Tamil Defense
  • February 3, 2022
  • Comments Off on எல்லையோர சாலை கட்டுமான அமைப்பின் பட்ஜெட் முதல் முறையாக 40% உயர்வு !!

இந்தியாவின் எல்லையோரங்களில் சாலைகள் பாலங்கள் சுரங்கங்கள் என் எல்லையோர உள்கட்டமைப்பு பணிகளுக்கு எல்லையோர சாலைகள் கட்டுமான அமைப்பு தான் பொறுப்பாகும்.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியா சீனா உடனான எல்லையோர பகுதிகளில் தனது நடவடிக்கைகளை விரைவுபடுத்தி பணிகமை வேகமாக நடத்தி முடிக்கும் எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 2500 கோடி ருபாயில் இருந்து 1000 கோடி ருபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்த ஆண்டு 3500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது இது சுமார் 40 சதவிகித உயர்வாகும், இது புதிய உள்கட்டமைப்புகளை உருவாக்க பயன்படும் என பாதுகாப்பு அமைச்சரின் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.