ஆகாஷ், அஸ்திரா ஏவுகணைகளின் ஒப்பந்தங்களுக்கு காத்திருக்கும் பாரத் டைனமிக்ஸ் !!

  • Tamil Defense
  • February 23, 2022
  • Comments Off on ஆகாஷ், அஸ்திரா ஏவுகணைகளின் ஒப்பந்தங்களுக்கு காத்திருக்கும் பாரத் டைனமிக்ஸ் !!

பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தின் தலைமை மேலாண் இயக்குனர் சித்தார்த் மிஷ்ரா ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ஆகாஷ் மற்றும் அஸ்திரா ஆகிய ஏவுகணைகளின் விற்பனைக்கு காத்திருப்பதாகவும்,

இந்த இரண்டு ஏவுகணைகளுமே தயாரிப்பு நிலையை எட்டியுள்ள நிலையில் அவற்றிற்கான மிகப்பெரிய ஒப்பந்தங்களை இந்திய படைகளிடம் இருந்து எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

இந்த ஏவுகணைகள் மீது வியட்நாம், ஃபிலிப்பைன்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா போன்ற பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டி உள்ளதும் குறிப்பிட தகுந்த விஷயமாகும்.